ராமரை பற்றி நான் ஏன் தவறாகப் பேச வேண்டும்?- ரூ.100 இழப்பீடு கேட்ட நோட்டீஸ்க்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்
ராமர் குறித்து தவறாக பேசியதாக குற்றச்சாட்டுக்கு ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக சார்பில் அளித்த நோட்டீஸ்க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ், நடிகர் பிரகாஷ்ராஜ் ராமர் குறித்து பேசிய வடந்தியாவிற்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் மூலம் பிரகாஷ் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு கோரப்படும் என நோட்டீஸ் வழங்கி இருந்தார்.
To all the desperate bigots #justasking pic.twitter.com/zGLpbEOcYp
— Prakash Raj (@prakashraaj) April 19, 2026
இதற்கு பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு தலைப்பைப் பற்றிய விவாதத்தில் நான் கூறிய சில தகவல்களை பிரித்து தவறான புரிதல்களுடன் பரப்புவதற்கு என்னை பயன்படுத்தி கொண்டனர். நான் எல்லா மதங்களையும் நேசிக்கிறேன், எல்லா மதத்திற்கும் மதிப்பு அளிக்க கூடியவன். ஸ்ரீ ராமரின் அவதாரத்தைப் பற்றி நான் ஏன் தவறாகப் பேச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழ்நாடு தேர்தல் பணியில் பிசியாக இருந்துவிட்டு, தற்போது கோடை வெயில் காரணமாக செடி, கொடிகளுடன் பேசி கொண்டு இருக்கிறேன். அதுவரை நீங்கள் என்னைப்பற்றி இப்படியே பேசுவதாக இருந்தால் பேசுங்கள், நான் எனது நேரத்தை பொருத்து நான் வந்து உரிய பதில் அளிக்கிறேன் என்று செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளார்.


