தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை!
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுடன் பிரஷாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக அவர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. தமிழக வெற்றிக்கழகம் 2026 தேர்தலை நோக்கி பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் பிரஷாந்த் கிஷோருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் கட்சியின் சிறப்பு ஆலோசகராக செயல்பட உள்ள பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


