த.வெ.க. ஆலோசகராக செயல்படுவதில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

 
அ அ

த.வெ.க. ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தற்காலிக விலககுவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

Vijay, Prashant Kishor step out together, set stage for party's 2026 battle

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் பிரஷாந்த் கிஷோர் கலந்துகொண்டார்.  2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் அரசியல் வியூகங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், த.வெ.க. ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தற்காலிக விலககுவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருவதால் தவெக ஆலோசகராக செயல்பட முடியவில்லை. ஆகவே தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசகராக செயல்படுவதில் இருந்து சிறிது காலம் விலகுகிறேன். தவெக தலைவர் விஜய்யின் ஆலோசகராக செயல்படுவது குறித்து நவம்பருக்கு பிறகு முடிவெடுப்பேன் என்றும் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.