தாயாரின் உடலை கண்டு கதறி அழுத பிரேமலதா! ஆறுதல் கூறிய முதல்வர்

 
a a

ட்தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சதீஷின் தாயார் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 83. சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எல் கே சதீஷ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரேமாதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்கே சுதீஷ் தர்மபுரி சென்றிருந்த நிலையில் தங்களது தாயின் மரண செய்தியை கேட்டு உடனடியாக சென்னை திரும்பினர். மறைந்த தனது தாயின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் அழுதனர். தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பிரேமலதாவின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.