கேப்டனை திரையில் பார்த்து கதறி அழுத பிரேமலதா

 
ச் ச்

கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ் ஆன நிலையில், நெய்வேலியில் உள்ள திரையரங்கில் படத்தை பார்க்க வந்த பிரேமலதா, பிரபாகரன் கதறி அழுதனர். தொண்டர் ஒருவர் அண்ணி அழுவாதீங்க என ஆறுதல் கூறினார்

நெய்வேலியில் கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் படத்தை பார்த்து விட்டு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது, “கேப்டன் பிரபாகரன் படத்தை கேப்டன் அவர்கள் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்ப எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததற்காக பெருமிதம் படுகிறேன். நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டம் செய்தவர்களை என்எல்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அந்த தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளராக பணி அமர்த்த வேண்டும் என்எல்சி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சிக்க கூடாது. மத்திய அரசு, மாநில அரசும் கருத்தில் கொண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என்றார்.