எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு..!
எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கட்சி பணிகள் குறித்தும் பேசியிருந்தார். அதில் ஒரு கட்டமாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அதில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது எனவும், ஒரு ராஜசபாவிடம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறினார். ஆனால் அந்த ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி, தற்போது முதுகில் குத்துவிட்டார் என நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்து விடுவது கிடையாது ; கடந்த காலங்களில் நடந்ததை போலவே தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்திலும் தேதி குறிப்பிடாமல் எங்களிடமிருந்த் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றுகொண்டுவிட்டார். அவர் முதலமைச்சர் இருந்தவர், ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என நம்பினோம். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார கூட்டத்திற்கு அதிகளவு கூட்டம் வருவதற்கு காரணம் அவர் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார் என்றும் பிரேமலதாக விமர்சித்திருக்கிறார். பிரேமலதாவின் இந்த கருத்துக்கள் மூலம் அதிமுக - தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


