#BREAKING தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு

 
tn

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதாவை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

vijayakanth

சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வருகை புரிந்துள்ளார். அவரை கண்ட தொண்டர்கள் உற்சாகமுடன் ஆரவாரம் செய்தனர்.

tn

இந்நிலையில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ள நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வகையில் முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.