ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் , 6 நாட்கள் சூறாவளிப் பிரச்சாரம்..

 
 பிரேமலதா


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 6 நாட்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.  

ஈரோடு கிடக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2ம்  தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது.  அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தை கட்சியின் வேட்பாளராக , பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.  அதனை அடுத்து தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

  பிரேமலதா!

இந்நிலையில் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்தும், பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார்.  தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வீதி, வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.