பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் - பிரேமலதா

 
premalatha

பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று பேரளவில் பேசப்படுகிறதே தவிர, இதுவரை குறைந்ததற்கான எந்தத் தரவுகளும்  இல்லை. குழந்தை பருவத்திலிருந்து முதியவர்கள் ஆகும் வரை, பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல்  இருப்பது மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது. இன்று (Nov 25th)சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  தினத்தை  முன்னிட்டு  அனைத்து பெண்களும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். 

எந்தப் பிரச்சனைகளையும்  நேர்மையுடனும், கண்ணியத்துடனும்  எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்,  பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசும் உறுதிப் படுத்த வேண்டியது  அவசியம் என்பதை இந்த நாளில்,  பெண்கள் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பெண்களுக்கும் இந்நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.