முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடுமையான உடல் நலம் பாதிப்பு- பிரேமலதா விஜயகாந்த்
மின் கட்டண உயர்வுக்கு காரணமான திமுக அரசை எதிர்த்து தேமுதிக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அந்த வகையில் சென்னை பூந்தமல்லி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் இங்கு எதுவுமே நடக்கவில்லை என பொய் பேசி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டறிந்து நியாயம் வழங்க வேண்டும். திமுகவை எதிர்த்து தினமும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.இதை பற்றி எல்லாம் வாய் திறக்கமாட்டார்கள். ஆனால் நீட்டை பற்றி பேசுவார்கள், மத்திய பட்ஜெட்டை பற்றி பேசுவார்கள். மத்திய அரசை குறை சொல்லும் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.
முதலமைச்சரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது, ஆரோக்கியமாக இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய இயலும், எனவே மூத்த அமைச்சர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கவேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின்வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.