சீமான் திடீரென அந்நியனாக மாறுவார்; திடீரென அம்பியாக மாறுவார்- பிரேமலதா
தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த், “தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான்... எங்கள் கட்சிதான் அதற்கான பதில். கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாக மாறுவார், திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. விஜய்யை தம்பி என்று சொன்னார் பின்னர் லாரியில் அடிபடுவார் என்று சொல்கிறார். எப்போதும் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றியுள்ளார்கள்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல பெயர் வாங்கினால் தான் திமுக இருக்க முடியும்.” என்றார்.


