SIR என்ற பெயரில் வாக்குத் திருட்டு- பிரேமலதா விஜயகாந்த்

 
“வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரலாம் , ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது”- பிரேமலதா “வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரலாம் , ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது”- பிரேமலதா

இந்த முறை உறுதியாக நீங்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணி தான் அமைப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுக்கு அதிமுக ஒரு சீட் வழங்காவிட்டால்...” - பிரேமலதா விஜயகாந்த் |  DMDK General Secretary Premalatha Vijayakanth comments on Rajya Sabha seat  - hindutamil.in


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தே.மு.தி.க சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இந்த முறை உறுதியாக நீங்கள் விரும்பும், தமிழக மக்கள் விரும்பும் கூட்டணி தான் அமைப்போம். உங்கள் கருத்துக்களை கேட்டு, கட்சி தொண்டர்களும் தமிழக மக்களும் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க அமைக்கும். உறுதியாக நல்ல நேரம் வரும்போது அதற்கான அறிவிப்பு உங்களுக்கு வரும். நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு, மகழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு தான் கூட்டணி அமையும்.

மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் எனமத்திய மாநில அரசுகளை தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம். S.I.R என்று உங்கள் வாக்குத் திருடப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. அதனால் ஒவ்வொரு தனிநபரும் சென்று உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள். நமது வாக்கை உறுதி செய்து விட்டால், அதை திருடும் உரிமை இந்த ஜென்மத்தில் உலகத்தில் எவனுக்கும் கிடையாது. இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் நமது ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை” என்று பேசினார்.