“கேப்டனை போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும்”- பிரேமலதா
நான் கூட்டத்திற்கு வந்ததும் மின்சாரம் துண்டிக்கின்றனர். சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நான் கூட்டத்திற்கு வந்ததும் மின்சாரம் துண்டிக்கின்றனர். சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? மின்சாரத்தை துண்டித்து மிகவும் கேவலமாக நடந்துகொள்கின்றனர். விஜய் எங்கள் வீட்டு பையன்.. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. கேப்டனை போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும். நேற்று முளைத்த காளான் என்று விஜய்யை நான் சொல்லவில்லை. அவர் எங்கள் வீட்டு பிள்ளை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் குறிப்பிட்டதில்லை. விஜய்க்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைபோல் அரசியலிலும் அவர் சாதிக்கவேண்டும். விஜய் எங்கள் வீட்டு பையன்.. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. கேப்டனை போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும்” என்றார்.


