“அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்”- பிரேமலதா

 
Premalatha Premalatha

ஜனவரியில் மக்கள் உரிமை மீட்பு  மாநாடு 2.0  தேமுதிக சார்பில் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

premalatha vijayakanth

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குன்னூரில் நடைபெற உள்ள பொது கூட்டத்தில் கலந்து கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். குன்னூரில் உள்ள மாவட்ட செயலாளர் வீட்டிற்கு சென்றார். அப்போது படுகர் மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  தொடர்ந்து செய்தியாளர்கள் பேசிய பொது செயலாளர் பிரேமலதா, “ஒரு எம்.பி பதவிக்காக  அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். ஜனவரியில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0  தேமுதிக சார்பில் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும். எஸ்ஐஆர் என்பதை வாக்கு திருட்டு என்கிறார்கள் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில்  வேலை செய்து வாழ்வார்த்தை உறுதி செய்யுங்கள் ஆனால் ஓட்டுரிமை என்பது அந்தந்த மாநிலங்களில் சேர்ந்த  மக்களுக்கானது. வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை என்பதை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதற்கு தேமுதிக ஒருபோதும் துணை நிற்காது” என்றார்.