உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி- பிரேமலதா
Feb 3, 2026, 19:23 IST1770126808315
எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். ஆனால் கூட்டணி குறித்து கட்சியினருடன் ஆலோசனை செய்து தெளிவான முடிவை விரைவில் அறிவிப்போம். எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை யாராலும் ஏற்று கொள்ள முடியாது.. இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.


