“ஒரு எம்.பி. சீட்டுக்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம்”- பிரேமலதா

 
பிரேமலதா பிரேமலதா

ஜனவரி 9 கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. கூட்டணி அறிவிப்பு குறித்து அந்த மாநாட்டில் தெளிவான முடிவெடுத்து அறிவிப்போம்எ என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மின் கட்டண உயர்வு, வரிவிதிப்பு ஆகியவற்றால் தொழில்கள் முடங்கியுள்ளன. கொலைகள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் மது போதை தான் காரணம். தவெக எம்ஜிஆரையும், விஜயகாந்தையும் பிரச்சாரத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஒரே ஒரு எம்ஜிஆர் தான், எம்ஜிஆருக்கு மாற்று யாரும் கிடையாது, அது போல் ஒரே ஒரு கேப்டன் தான். அதற்கு மாற்று யாரும் இல்லை, ஆகையினால் அவர்களெல்லாம் born லீடர்ஸ் அவர்களுக்கு யாரும் மாற்றாக முடியாது. வெளி மாநில வாக்காளர்களை தமிழகத்தில் சேர்க்கக்கூடாது, இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.. அந்தந்த மாநிலத்தில் மட்டுமே வாக்காளர்களை பதிவு செய்ய வேண்டும். வாக்கு திருட்டு என்று நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் வாக்குரிமை பறிக்கப்பட்டால் ஜனநாயகம் தேவையற்றதாகிவிடும். இதற்கு மத்திய மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

யாரும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியும் என்பதை கேப்டன் நிரூபித்துள்ளார்.  2026 உறுதியாக கூட்டணி ஆட்சி தான். இந்த முறை தமிழ்நாட்டில் அமையும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தேமுதிக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும். தேமுதிகவுக்கு ஒரு MP சீட் தருவதாக அதிமுக கூறியது. எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான். அதில் எந்த வருடம் என்று குறிப்பிடவில்லை, அவர்கள் ஏமாற்றவில்லை. அடுத்த ஆண்டு தருவதாக சொல்லி இருக்கிறார்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்களுக்கு தான் எதிர்காலம் இருக்கும். ஒரு எம்.பி. சீட்டுக்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம். கடை கோடி தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புபவர்களுடன் கூட்டணி அமைப்போம். 80% பிரசாரம் முடித்துள்ளேன். இன்னும் அடுத்த கட்ட பிரசாரம் கன்னியாகுமரியில் தொடங்கி முடிக்க உள்ளேன். அதன் பிறகு ஜனவரியில் மாநாட்டில் கூட்டணி அறிவிப்போம்” என்றார்.