சிறந்த மாநகராட்சி விருதை திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திரத் திருநாளையொட்டி சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர்,பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

tn

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சுதந்திரத் திருநாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு  தகைசால் தமிழர் விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை  வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணினித் துறை பேராசிரியர் முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமி அவர்களுக்கு வழங்கி, சிறப்பித்தார். அத்துடன் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி நா.முத்தமிழ்செல்வி அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

tn
இந்நிலையில் | சிறந்த பேரூராட்சிகளில் விக்கிரவாண்டி முதல் இடம், புதுக்கோட்டை ஆலங்குடிக்கு 2வது இடமும்,  சிறந்த நகராட்சிக்கான முதல் இடம் ராமேஸ்வரம் -ரூ.20 லட்சம் பரிசு, 2வது இடம் திருத்துறைப்பூண்டி - ரூ.10 லட்சம் பரிசு, 3வது இடம் மன்னார்குடி - ரூ.6 லட்சம் பரிசும் வழங்கபட்டது. சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு - ரூ.50 லட்சம் பரிசு, 2வது இடம் தாம்பரம் - ரூ.30 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.