ரத்தன் டாடா மறைவு : குடியரசுத் தலைவர் , பிரதமர் மோடி இரங்கல்..

 
Modi - Tata


பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபராக இருந்தவர்  ரத்தன் டாடா.  இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா,  உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட, நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு  சிகிச்சை பலனின்றி காலமானார்.  இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்த் தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Ratan Tata

அந்தவகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “ரத்தன் டாடாவின் மறைவால், கார்பரேட் வள்ர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார். 

மேலும் அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

null


பிரதமர் நரேந்திர மோடி, “ரத்தன் டாடா அவர்கள்  தொலைநோக்கு சிந்தனை கொண்ட வணிகத் தலைவர், இரக்கமுள்ள மற்றும் ஒரு அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு  அளவில்லதது.  அவர் தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பலராலும் நேசிக்கப்பட்டவர். 

  ரத்தன் டாடாவின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பெரிய கனவுகள் மற்றும் திரும்பக் கொடுப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம். கல்வி, சுகாதாரம், சுகாதாரம், விலங்குகள் நலம் போன்றவற்றில் அவர் முன்னணியில் இருந்தார்.

 ரத்தன் டாடாவுடன் இருந்த  எண்ணற்ற உரையாடல்களால் என் மனம் நிறைந்திருக்கிறது. நான் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். அவருடைய பார்வையை நான் மிகவும் செழுமையாகக் கண்டேன். நான் டெல்லி வந்தபோதும் இந்த தொடர்புகள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.” என்று குறிப்பிட்டுள்ளார்.