முதல்வர் ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர் , அமித்ஷா வாழ்த்து..

 
stalin


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.  

draupadi murmu
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளையொட்டி,  இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், “தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல் ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

modi stalin

இதேபோல்,  இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், “ எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, பின்னர் தொலைபேசி வாயிலாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து  தெரிவித்திருக்கிறார்.  இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்  தொலைபேசி வாயிலாக  முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைக் கூறினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின்,  பிரமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.