அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு - முதலமைச்சர் ஆலோசனை

 
stalin

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

vegetables

தமிழ்நாட்டில் காய்கறிகள் , மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள்,  காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் மட்டுமின்றி,  உணவகங்கள் நடத்தி வருவோரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தக்காளி, சின்ன வெங்காயம்,இஞ்சி, கேரட் ,பீன்ஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  அதேபோல் எரிபொருள், காய்கறி, உணவு தானியங்கள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்,  விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழல் ஏற்பட்டுள்ளது.

stalin

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள்,  அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.