அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை - கே.பி.முனுசாமி சாடல்!!

 
kp munusamy kp munusamy

"அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்" என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கி விட்டோம்; அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும்.

KP Munusamy

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுக தொண்டர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்; தேர்தல் முடிந்த பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை உணர்வார்.

Annamalai

அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை; முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ஐ வாழ்த்தி தான் நரேந்திர மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி பேசுவதில்லை; வாஜ்பாய் மறுக்கப்படுகிறாரா அல்லது மறந்துவிடுகிறார்களா என தெரியவில்லை என்றார்.