கடலூரில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி, 80 பேர் காயம்..

 
கடலூரில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி, 80 பேர் காயம்..


கடலூர் மாவட்டத்தில்  இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  80 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றுள்ளது. இதேபோல் பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளுடன்  தனியார் பேருந்து வந்துள்ளது.  மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கடலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்த  பேருந்தின்  முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த  பேருந்து, சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே பண்ரூட்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது நேருக்கு நேர்  மோதியது. இதனால் பேருந்தில்  இருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

dead
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டும்,  அவ்வழியே சென்றவர்கள் இதனைப்பார்த்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் போலீஸாருக்கும் , ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.   80-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.   காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக  பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.