அரசு மருத்துவமனையில் தரமற்ற மருந்து கொள்முதல்- அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

 
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல் செய்த விவகாரத்தில் மருந்தாளூநர் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Indira Gandhi Government General Hospital in White Town,Pondicherry - Best  Hospitals in Pondicherry - Justdial

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழி மையங்களில் கர்ப்பிணிகளுக்கு கொடுக்க தரமற்ற மருந்துகள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்ம் தரமற்ற சத்து மாத்திரையால் வாந்தி ஏற்பட்டது. 2 குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்த மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், தேசிய ஊரக சுகாதார இயக்கக மருந்தாளுநர் நடராஜன் மற்றும் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. நடராஜன் மனைவி மற்றும் நண்பரின் நிறுவனங்கள் இந்த மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. இதனால் அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியிருந்தனர். இதையடுத்து நடராஜன் பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019-ல் நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இதுதொடர்பாக தலைமை செயலாளருக்கு புகார்கள் சென்றது.இதனையடுத்து மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தலைமை செய்லாளர் ராஜீவ்வர்மா உத்தரவிட்டார். இதன்பேரில் மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரிஜோசப்பின் சித்ரா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.  எஸ்பி மோகன்குமார் உத்தரவின்பேரில் நடராஜன் மற்றும் தேசிய ஊரக சுகாதார இயக்கக அதிகாரிகள் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மோசடி உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மருந்தாளுநர் நடராஜனை கைது செய்ய உள்ளனர்.

புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்ற மாத்திரை விநியோகம்? -  நோயாளியுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் ஆய்வு | Distribution of  substandard ...

மருந்தாளுநர் நடராஜன் சுகாதார இயக்கத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய்வர். இவருக்கு மருந்து கொள்முதல் செய்யும் அதிகாரத்தை வழங்கி அதிகாரிகள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.மருந்தாளுநர் நடராஜன் வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் தரமற்ற மருந்து மோசடியில் ல அதிகாரிகள் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இது சுகாதாரதுறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.