ஆவணம் எழுதுவோர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழையத் தடை!!

 
tn

சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுவோர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாட்டில் பதிவுத் துறை அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் இணையவழியில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் பதிவு துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 என்னும் பதிவுத்துறை செயலில் விரைவில் கொண்டுவரப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். அத்துடன் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் தரலாம் என்றும்,  பதிவு பத்திரத்திற்கு வருவோர் பணம் கொண்டுவர தேவையில்லை,  ஏடிஎம் கார்டு மூலம் பதிவு கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது என்றும் ஆவணம் எழுதுபோரில் நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.  ஆவணம் எழுதுபவர்கள்  அத்துமீறல்  அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பதிவுத்துறை இவ்வாறு தெரிவித்துள்ளது. அதேசமயம் அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் மட்டுமே தவிர மற்றபடி ஆவணம் எழுதுவோர் அலுவலகங்களில் நுழையக்கூடாது என்றும் , மாவட்ட பதிவாளர்கள் மண்டல தலைவர்கள் ஆய்வின் போது நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.