தினமலருக்கு வலுக்கும் எதிர்ப்பு- விளம்பர பதாகைகள் அகற்றம்

 
தினமலர்

சென்னை ஆயிரம் விளக்கு வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தினமலர் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

Image

காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் காலை உணவு திட்டம் குறித்து அவதூறாக தினமலர் நாளிதழில் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினமலர் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.  மேலும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் தினமலர் நாளிதழுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு - வள்ளுவர்கோட்டம் பகுதியில், சாலையோரப்பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தினமலர் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.