தமிழக பாஜக அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் - காங்கிரஸ் அறிவிப்பு

 
annamalai ks alagiri annamalai ks alagiri

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

bjp

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மூடி மறைத்து, திசை திருப்பும் நோக்கத்துடன் தலைவர் ராகுல் காந்தி அவர்களை மிக மிக கேவலமாக இழிவுபடுத்துகிற வகையில் கேலிச்சித்திரத்தை  வெளியிட்ட பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் இன்று (06.10.2023) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் நடைபெறவுள்ளது. 

Annamalai
சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு எம்.ஏ.முத்தழகன், திரு எம்.எஸ்.திரவியம், திரு ஜெ.டில்லிபாபு, திரு சிவ ராஜசேகரன், திரு எம்.பி.ரஞ்சன் குமார், திரு அடையார் த. துரை மற்றும் திரு தளபதி எஸ்.பாஸ்கர், திரு பி.வி.தமிழ்செல்வன், திரு ஜெ.பாலமுருகன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு முன்னிலை வகிப்பார்கள். இதில் தமிழக காங்கிரஸின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில - மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்பார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.