அனுமதியின்றி போராட்டம்- பாஜகவினர் 650 பேர் மீது வழக்குப்பதிவு

 
போராட்டம் போராட்டம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

tt


கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தில் மூன்று இடங்களிலும், தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் ஒரு இடத்திலும் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Image


அனுமதி இன்றி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, வி. பி. துரைசாமி, எம் எல் ஏ காந்தி உள்ளிட்ட 650 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.