டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது- அமைச்சர் விளக்கம்

 
tnpsc

டி.என்.பி.எஸ்.சியில் கொண்டு வரப்படும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் வலியுறுத்தினார்.

UPSC தேர்வு பயிற்சியில் சேர்ந்தால் ஊக்கத்தொகை.. குட் நியூஸ்

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில்  டிஎன்பிஎஸ்பி குரூப் 4 மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடைபெற்றதாக  சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட சிபிஎம், சிபிஐ மற்றும்  தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கொண்டு வந்து பேசினர்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம்  தெரிவிக்கப்பட நிலையில், முதலமைச்சரின் ஆலோசனைப்படி  தற்போது அரசு தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என நிதித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

7,000 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். அதும் ஒரே நாளில் தேர்வு என்றால் பல்வேறு குளறுபடிகள் இருக்க செய்யும், இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள், குறிப்பாக தேர்வில் எழுதுவதில்  மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது என நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.