"குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு" - பொதுமக்கள் எதிர்ப்பு

 
ttn

தாம்பரம் மாநகராட்சி 12 வார்டில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

tn

சென்னையில் பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இங்கு கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.  34. 02 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகையான குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில்,  குப்பையை  பயோ மைனிங் முறையில் சுமார் 350. 65 கோடி ரூபாய் செலவில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது 50 %  பணிகள் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை போல் கொடுங்கையூர் குப்பை கிடங்கு திடக்கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

tn

இந்த சூழலில் பல்வேறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதியில் கொட்டுவதும் இதை பொதுமக்கள் எதிர்த்து வருவதும் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.  அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சி 12 வார்டில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் கோரிக்கையை மீறி குப்பை கிடங்கு அமைத்தால் வாக்காளர் அட்டையை அரசாங்கத்திடமே ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.