10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு!!

 
tn

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று எனது தலைமையில் @tnschoolsedu  கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

tn

அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மேம்பாடு, அதன் தற்போதைய நிலை, விலையில்லாக் கல்வி உபகரணங்கள்  உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.


முன்னதாக பள்ளிக் கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களை பொதுமக்களும், மாணவர்களும் எளிதாக பெறுவதற்கான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையவழிச் சேவைகளைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களையும் வெளியிட்டோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.