2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
Jan 13, 2025, 14:39 IST1736759368516
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகடிப்பட்டு மேம்பாலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இரண்டு காரில் பயணம் செய்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் பிரபாகரன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


