#JUST IN : புதுச்சேரி முதல்வர் அரசுக்கு நன்றி: "இதைக் கூட தமிழக திமுக அரசு கற்றுக் கொள்ளாதா?" - தொண்டர்கள் மத்தியில் விஜய் ஆவேசம்!

 
1 1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

அவர் பேசியதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஒன்றிய அரசிற்கு தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம் புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனா நமக்கு எல்லாமே நம் சொந்தங்கள் தான் தமிழ்நாடு புதுச்சேரி தனி தனியா இருந்தாலும் நாம் எல்லோரும் நம் உயிர் தான் நம் உறவு தான்.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் சொந்தங்கள் தான். 

தமிழ்நாடு மாதிரி புதுச்சேரி மக்களும் ஒரு 30 வருஷம் என்ன தாங்கி புடிச்சிட்டு இருகாங்க.   விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது எனது கடுமை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது. வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்வு என்றாலும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். புதுவை அரசுக்கும், புதுவை முதல்வர் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என பேசினார்