ஆண் நண்பரை விரட்டியடித்து மாணவிக்கு பாலியல் டார்ச்சர்- பல்கலை.யில் அதிர்ச்சி

 
s s

புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் வட மாநில மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் போல புதுச்சேரியிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காலாபட்டு பகுதியில் உள்ள தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்துவிட்டு மாணவியிடம் அத்துமீறியுள்ளனர். கும்பலிடம் இருந்து மாணவி கீழே விழுந்து உயிர் தப்பியுள்ளார். காயமடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் போல புதுச்சேரியிலும் வட மாநில மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.