”அன்புமணிக்கு பதவி கொடுத்தது தவறு என மிகவும் தாமதமாக ராமதாஸ் உணர்ந்துள்ளார்”- பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. ஏற்கனவே 2024 தேர்தலில் இது முடிவு செய்யப்பட்டது தான், திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர், அது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம், வார்த்தை தான் முக்கியம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இது ஏற்கனவே 2024 தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அதிமுக ராஜ்யசபா சீட்டு தேமுதிக கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழி இதற்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக நாங்கள் பதட்டமோ, பயமோ வேறு எந்த முடிவு நாங்கள் எடுக்கவில்லை. பொறுமைக் கடலினும் பெரிது என்று பத்திரிகையாளர்களுக்கு தான் நான் கூறினேன்.
திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர், அது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம், வார்த்தை தான் முக்கியம். 2024 தேர்தலிலேயே 5 எம்பி சீட்டுகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் முடிவு செய்யப்பட்ட ஒன்று. தேமுதிகவிற்கு வந்த வாய்ப்பை ஒரு முறை அன்புமணி ராமதாஸ் படி தட்டி பறித்து விட்டார். மற்றொரு முறை ஜிகே வாசனுக்கு தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. எனவே தான் கூறுகிறோம், ஏற்கனவே முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட் தேமுதிக தர வேண்டியது அதிமுகவின் கடமை. சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து தேமுதிகவிற்கு அதிமுக தலைமை அறிவிக்க வேண்டும்.

இரண்டு நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். நாங்கள் எங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் . எங்களுடைய முயற்சிகளுக்கு ஆறு மாதம் எங்களுக்கு தேவை, அதனால் தான் கூறுகிறேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் எங்களுடைய நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படும். கட்சி தொடங்கும் போது விஜய்க்கு எங்களை பிடிக்கவில்லை, செந்தூரப்பாண்டி படத்தில் இருந்து எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி விஜய் வருவார். தேமுதிக மற்றவருக்கு யோசனை கூறக்கூடிய இடத்தில் இல்லை. அதேபோன்று விஜயும் யோசனை பெறக்கூடிய நிலையில் அவர் இல்லை, அவருடைய கட்சியை வளர்ப்பது என்பது அவருக்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினை என்பது அவருடைய குடும்ப பிரச்சனை. இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது, பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் மீது ராமதாஸ் வைத்து வருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுத்ததே தவறு என்று தற்போது கூறுகிறார். காலம் கடந்த யோசனையாக தான் இதை நான் பார்க்கிறேன். இதை இப்போதுதான் அவர் உணர்ந்துள்ளார்” என்றார்.


