7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
Feb 18, 2025, 12:25 IST1739861748824
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக 58 வயதான பெருமாள் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பெருமாள் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்ரோரிடம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.


