பைக் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பிரேக் பிடிக்காததால் நொடியில் நிகழ்ந்த விபத்து

 
ச் ச்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்ற அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கிய நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் எகிரி குதித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அறந்தாங்கியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு அந்தப் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பிரேக்கை சரி செய்வதற்கு பேருந்து ஓட்டுனர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று கொண்டிருந்த போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் திரும்பும் சாலையில் பிரேக் பிடிக்காததால் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே உள்ள சுப்பிரமணி  நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் நீல மணிகண்டன் ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி இறங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து எகிரி குதித்து உயிர் தப்பினர். 


இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பிரேக் பிடிக்காத பேருந்தின் டயரில் கட்டை போட்டு அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கிய காட்சி அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது அந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காட்சியில் பிரேக் பிடிக்காமல் பேருந்து சென்றபோது பேருந்து நடத்துனர் ஓடி வந்து பேருந்தை நிறுத்த முயற்சி செய்யும் பொழுது அந்தப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்குகிறது. இந்நிலையில் இதுகுறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.