விஜய் காலில் விழ கூட தயாராக உள்ள பழனிசாமி- புகழேந்தி

 
விஜய் ஈபிஎஸ்

வெளியில் வரும் போது எல்லாம் அ.தி.மு.க.,வை சேர்த்து வைப்பேன் எனக் கூறி சசிகலா ஒரு சினிமா ஓட்டிக்கொண்டு இருப்பதாக புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

V.pugazhendhi,அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம் - pugazhendhi  appointed as aiadmk spokesperson - Samayam Tamil

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, “அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள்,  கட்சியினர் எல்லோம் ஒன்று சேர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்யப்பட்டு விட்டதாக பழனிசாமி அறிவித்தார். ஆனால், தற்போது ஒருமித்த கருத்துகள் இருந்தால் கூட்டணி வைத்துக்கொள்ள தயார் என்கிறார். பழனிசாமி தெரிந்து, புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் ஒற்றை காலி நின்று வருகிறார்கள். ஜெயக்குமார் ஒன்றுக்கும் உதவாதவர் கத்திக்கொண்டு இருக்கிறார். யார் பழனிசாமியை தேடி கூட்டணிக்கு வருகிறார்கள். 

நாங்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம் என்பதால் தான், விஜய் எங்களை பற்றி பேசவில்லை என பழனிசாமி கூறி வருகிறார். அப்படி இல்லை, விஜய் பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை. பழனிசாமி யாரை ஏமாற்ற நினைக்கிறார். பழனிசாமி மீண்டும் பா.ஜ .க காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழனிசாமி முதல்வராக இருந்த போது, பல்வேறு துறைகளை தனது கையில் வைத்து இருந்தார். வேறு நபர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? யாரும் அறிவாளிகள் இல்லை. ஏன் பிறருக்கு பதவியை கொடுக்கவில்லை? ஏன் உதயநிதியை பற்றி பேச வேண்டும்?. பழனிசாமி விஜய் காலில் விழ கூட தயாராக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் இறந்த விஜயகாந்தின் அனுதாபதிற்காக 20 சதவீதம் வாக்கு கிடைத்தது.   

Bangalore Pugalendi says AIADMK is in the hands of a dictator - TNN |  Bengaluru Pugalendi: "சர்வாதிகாரி கையில் அதிமுக உள்ளது" - பெங்களூரு  புகழேந்தி ஆவேசம்

பழனிசாமியுடன் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். உள்கட்சியில் உள்ளவர்களை பழனிசாமி சேர்த்துக்கொள்ள முடியாது என தகராறு செய்துக்கொண்டு இருந்தால் யார் தான் உன்னுடன் கூட்டணிக்கு வருவார்கள். மத்திய அரசை பார்த்து பழனிசாமி பயப்பட ஆரம்பத்தின் விளைவு பா.ஜ.,வுடன் சரணடைந்துள்ளார். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்காக பழனிசாமியிடம் பலமுறை கேட்டோம். ஆனால்   சசிகலாவுக்கும், ஓ.பி.எஸ்.,க்கும், ஒருங்கிணைப்பு குழுவுக்கும் யாரை சேர்க்க மாட்டேன் என்பதே அவரது ஒரே பதில். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்து விட்டது. அந்த நம்பிக்கை பழனிசாமியால் போகி விட்டது. அ.தி.மு.க.,வை இணைக்க முடியாவிட்டால் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்பேன். அ.தி.மு.க., இணைப்புக்கு பழனிசாமி தான் தடையாக உள்ளார். வெளியில் வரும் போது எல்லாம் அ.தி.மு.க.,வை சேர்த்து வைப்பேன் எனக் கூறி சசிகலா ஒரு சினிமா ஓட்டிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.,வுக்கு ஒரு கஷ்டமான நிலை உருவாகியுள்ளது. எப்படி அ.தி.மு.க, மீண்டும் வர போகிறது என தெரியவில்லை” என்றார்.