ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் வழங்கக்கூடாது. தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை (Re-Joinder) புகழேந்தி சமர்ப்பித்தார்.

அண்ணா திமுக உள் கட்சி விவகாரம், இரட்டை இலை சம்பந்தமாக 13.01.2025 இன்றைக்குள் இறுதியாக பதில் மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என தலைமை தேர்தல் ஆணையம் முன்னமே அறிவித்திருந்தது. அதன்படி முக்கிய புகார் சம்பந்தமாக புகழேந்தி இன்று பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற தேர்தலின் போது வழங்கப்பட்டது. நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் யாருக்கும் வழங்கப்படக் கூடாது நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலுக்கு மாத்திரமே உச் நீதிமன்ற ஆணை பொருந்தும் இதை வேறு தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் சொல்லியும் தேர்தல் ஆணையம் இந்த ஆணையை மீறி உள்ளது.
நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவில் தீர்ப்பு பழனிசாமிக்கு எதிராக வருமேயானால் இடையில் கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதால் எதிர்தரப்புக்கு ஏற்படும் இழப்பை எப்படி சரி செய்ய முடியும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார் . புகழேந்தி தொடுத்திருந்த டெல்லி உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்புப்படி உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்தின் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் டிசம்பர் 24 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அழைப்பை ஏற்று தேர்தல் ஆணைய விசாரணையில் கலந்து கொள்ளவும் இப்பொழுது மட்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அழுத்தம் தரவில்லை என்றும் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதனை மனுவில் குறிப்பிட்டுள்ள புகழேந்தி, தவறான முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டி இருக்கும் என்பதனை கோடிட்டு காட்டியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் நகலையும் இணைத்துள்ளார். எந்த நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு சின்னத்தை வழங்க உத்தரவிடவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் புகழேந்தி ஒரு தரப்பினராக (party ) தவறாகசேர்த்து உள்ளதாக ஊடக செய்தி மூலம் அறிந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகியதில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து எந்த தொடர்பு கடிதமும் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


