இது மகிழ்ச்சியான தீர்ப்பு...வழக்கில் வெற்றி பெற்றே தீருவோம் - புகழேந்தி பேட்டி!

 
Pugazhendi Pugazhendi

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மகிழ்ச்சியான தீர்ப்பு என புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், இது மகிழ்ச்சியான தீர்ப்பு எனவும், இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம். இந்த வாட்டி ஏமாற்ற முடியவில்லை. நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கும், இந்த வழக்கில் வெற்றி பெற்றே தீருவோம் என கூறினார்.