பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது!

 
ramadoss

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை கிடைத்துள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Ponmudi

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த  வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது.  உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு பொதுவாழ்க்கையில்  இருப்பவர்களுக்கு  ஒரு பாடம்.



அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற  சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.என்று குறிப்பிட்டுள்ளார்.