சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி..! பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் பணிநீக்கம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் வேலப்பன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது பெற்றோருடன் கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் குமரேசன் (வயது 39) வீட்டுக்கு கடந்த 25ஆம் தேதி வந்துள்ளார். பெற்றோருடன் சிறுவாபுரி பெரியபாளையம் கோயில்களுக்கு சென்று விட்டு மாமா குமரேசன் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார். 26 ஆம் தேதி இரவு சிறுவனின் பெற்றோர் நாகர்கோவில் புறப்பட்டு சென்று விட்டனர். சென்னையைச் சுற்றி பார்ப்பதற்காக சிறுவன் மட்டும் மாமா வீட்டிலேயே தங்கி இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு குமரேசன், வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் வேலப்பன் ஆகிய இருவரும் குமரேசனின் வீட்டிலேயே மது அருந்தி உள்ளனர். போதை அதிகமானதும் சிறிது நேரம் உளறிவிட்டு குமரேசன் தூங்கியுள்ளார். அப்போது காவலர் வேலப்பன் மற்றொரு அறையில் இருந்த சிறுவனிடம் பேச்சி கொடுத்து, அவனது வாயில் தனது ஆணுறுப்பை திணித்துள்ளார். பிறகு கட்டாயப்படுத்தி மதுபானத்தை அவனது வாயில் ஊற்றியுள்ளார். சிறுவன் கத்தி கூச்சலிட்டதுடன், அறையில் கிடந்த டிவி ரிமோட்டை எடுத்து காவலர் வேலப்பனின் முகத்தில் தாக்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீர் மல்க சிறுவன் புகார் தெரிவித்துள்ளான். இதையடுத்து இரவு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் மாமா குமரேசன், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் வேலப்பன் ஆகியோரை பிடித்து வந்து அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், இந்திய அரசியலமைப்பு சட்டம் , பிரிவு 311 ன் கீழ், மேற்படி தலைமைக் காவலர் P.வேலப்பன் என்பவர் இன்று (29.05.2026) பணி நீக்கம் (Dismissal from Service) செய்யப்பட்டார்.

