முதுபெரும் தமிழக தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மரணம் - கமல் ஹாசன் இரங்கல்!!

 
kamal

தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார் . அவருக்கு வயது 92.  இவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு பலராலும் அறியப்பட்ட இவர் 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.  நாகசாமி 1963 முதல் 1966 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும்,  1966 முதல் 1988 வரை தமிழ்நாடு அரசு தொழில் துறையின் முதலாவது இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார்.  நாகசாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

kamal

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன், "மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.