"தமிழ் திரையுலகிலும் பாலியல் சுரண்டல்கள் உள்ளன" - ராதிகா பரபரப்பு பேட்டி

 
ஆறு வருஷம் டெலிகாஸ்ட் ஆகியும் நஷ்டத்தில் போனதா ‘வாணி ராணி’ சீரியல்! அதிர்ச்சி கொடுத்த ராதிகா!?

தமிழ் திரையுலகிலும் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

Radhika Sarathkumar has acted in 380 films | 380 படங்களில் நடித்து ராதிகா  சரத்குமார் சாதனை முதன் முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ராதிகா, “ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையிலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும். 80களில் இருந்து பார்க்கிறேன். தமிழ் திரையுலகிலும் பாலியல் சுரண்டல்கள் உள்ளன, பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லைல் திரையுலகம் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. கேரவன் விவகாரத்தில் என்னை தொடர்புகொண்ட கேரள போலீசாரிடம் என்ன நடந்தது என விரிவாக கூறினேன். ஆனால் அவர்களிடம் புகார் அளிக்கவில்லை. சில இடங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே பேசினேன்.

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை இருக்கிறது.  என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டேன். ஹேமா கமிட்டி குறித்து பிரபல நடிகர்கள் பேசாமல் மவுனம் காப்பது தவறாக தெரிகிறது. பெரிய நடிகர்கள் குரல் கொடுத்தால், எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றார்.