"வேகமெடுக்கும் ஒமைக்ரான்... 4 அடுக்கு பாதுகாப்பு" - ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் முக்கிய தகவல்!

 
ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் திடீரென உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரேயொருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இச்சூழலில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு பணிகள் தொடங்கிவிட்டன. ஒமைக்ரான் அதிகம் பரவ வாய்ப்பு உள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். 

கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்! | nakkheeran

விமான நிலையத்திலேயே சோதனை செய்து அங்கேயே கட்டுப்பாடுகளை தொடங்கிவிடுகிறோம். அதன்பின் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சோதனை செய்கிறோம். 4 ஆயிரத்து 700க்கும் அதிகமான தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்துள்ளோம். இதில் 57 பேருக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில்தான் 34 பேருக்கு ஓமிக்ரான் வந்துள்ளது. இன்னும் 23 பேருக்கு ஜீன் முடிவுகள் வர வேண்டும். இவர்கள் அனைவரும் 4 அடுக்கு பாதுகாப்பில் உள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது. 

omicron affected person cured || ஒமைக்ரான் தொற்றில் இருந்து வாலிபர்  குணமடைந்தார்

எங்கெல்லாம் சூப்பர் ஸ்ப்ரெட் நடக்க வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். கூடுதலாக கண்காணிக்க சொல்லி இருக்கிறோம். உடனடியாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தி வருகிறோம். இதனால் எல்லோரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எஸ் ஜீன் டிராப் கண்டறியப்பட்டதும் ஜீன் சோதனைக்கு அனுப்பிவிடுகிறோம். உடனே அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.