'மகளிர் உரிமைத்தொகை' - "வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு"

 
radhakrishnan radhakrishnan

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது; நாளை முதல் தெருவாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.

radha krishnan health

டோக்கன் வழங்கப்படும், அதற்கு ஏற்ப அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் பொதுமக்கள் வந்தால் போதும். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும்.

radhakrishnan

நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்; பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.