“த.வெ.க அரசு ரொம்ப நல்லாவே இருக்கு.. பொறாமையால தான் குறை சொல்றாங்க! தற்குறிகள் அல்ல கூர்மையான அம்புக்குறி”- ராகவா லாரன்ஸ்

 
“த.வெ.க அரசு ரொம்ப நல்லாவே இருக்கு.. பொறாமையால தான் எதிர்கட்சிகள் த.வெ.க அரசு மீது குறை சொல்றாங்க”- ராகவா லாரன்ஸ்

அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை எடுத்துள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ், “அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை எடுத்துள்ளேன். விரைவில் ரசிகர்களை கூட்டி மேடையில் எனது தாய் முன்னால் முடிவை அறிவிக்க இருக்கிறேன். சின்ன பசங்க முதல் வயசானவங்க வரை, நீங்க அரசியலுக்கு வாங்க... நீங்க வராம யாரு வரப்போறாங்கன்னு? கேட்கிறாங்க! இன்னும் சில பேர், என்னண்ணே, யோசனை பண்றீங்க வாங்கன்னு சொல்லி திட்றாங்க! சும்மா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கணுமா? இல்ல மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்படணுமா? நீங்களே சொல்லுங்க! என்னை உரிமையோடு அரசியலுக்கு அழைக்கின்றனர்.

ரஜினியின் ஆசிர்வாதத்துடன் உங்களிடம் பேசுகிறேன். நான் அரசியலுக்கு வருகிறேனா என்பது குறித்து எனது தாய் முன்னிலையில் தெரிவிப்பேன். எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது, எல்லோரும் என் நண்பர்கள்தான். தவெகவின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். மாற்றம் வேணும்னு சொல்லி தான் வாய்ப்பு கொடுத்திருக்கீங்க கொஞ்சம் டைம் கொடுங்க... பொறாமையால தான் எதிர்கட்சிகள் த.வெ.க அரசு மீது குறை சொல்றாங்க! தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல சார்பான அம்புக்குறிகள் பெரிய மலையவே உடைக்க கூடிய அளவுக்கு..  கல்வி நிலையங்கள், கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கதக்கது. வளர்ந்து வருவதை பிடிக்காததால் தவெக மீடு விமர்சனம் செய்கின்றனர்” என்றார்.