" நீங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" - ஸ்டாலினுக்கு ராகுல் வாழ்த்து!!

 
tn

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வாழ்த்து கூறியுள்ளார். 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசி வாயிலாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,  உங்களுக்கு நீண்ட பொது வாழ்வு அமைய வேண்டும் என்று அவர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

tn

அத்துடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலினை  இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

tn
முன்னதாக  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி , தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்ததுடன்,  தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.