ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கனும் - மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..!!

 
Rahul Rahul


ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.  

மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி,  தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது,  மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில்  1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.  இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.  

இந்திய தேர்தல் ஆணையம்

ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒருமித்த  குரல் கொடுக்க நாட்டு மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “வாக்குகள் திருடப்படுவது ஒரு நபர் - ஒரு ஓட்டு’ என்கிற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காள பட்டியல் அவசியமானது. அதனால்தான் , மக்கள் மற்றும் கட்சிகள் சரிபார்க்கும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம். 

எங்களது குரலுக்கு வலு சேர்க்க Votechori.in/ecdemand என்கிற இணையதளத்தை பார்வையிடுங்கள் அல்லது 96500 03420 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இது  நம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதல் ” என குறிப்பிட்டுள்ளார்.