சாதிவாரி கணக்கெடுப்பை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும்- ராகுல்காந்தி
வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணெக்கெடுக்க மத்திய அரசு முடிவு எடுத்த விவகாரம் என்பது 11 ஆண்டுகளுக்குப் பின் ஞானோதயம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “11 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஞானோதயம் வந்து மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை கொண்டுவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்போது அறிவிப்பு என்பது தெரியாது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, காங்கிரசின் முன்னெடுப்பை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது, வரவேற்கிறோம். எப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாஜக அரசு செயல்படுத்த வேண்டும். 11 ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு தாமதப்படுத்திவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்.
நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரியபோது பாஜக அரசு எதிர்த்தது, ஆனால் தற்போது திடீரென அறிவித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்கு சிந்தனையை பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் 50சதவீதம் என்ற வரம்பை நீக்குவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுகு ஒன்றிய அரசு பணிந்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஒன்றிய அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.


