ஓடும் வாகனங்கள் மீது விழுந்த ரயில்வே கேட்... நூலிழையில் உயிர் தப்பிய மக்கள்! அதிரவைக்கும் காணொலி

 
ச் ச்

கோவையில் ரயில்வே கிராசிங்கில் கடந்து கொண்டு இருந்த வாகனங்கள் மீது ரயில்வே கேட் திடீரென விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து போக்குவரத்து மிகுந்த பகுதிகளில்  நெரிசயின்றி வாகன ஓட்டிகள் கடந்து செல்வதற்கு, பல்வேறு பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது. ஒரு சில இடங்களில் குறைந்த வாகனங்கள் கடந்து செல்லும் பகுதிகளில் ரயில்வே கேட் செயல்பட்டு கொண்டு வருகிறது. 



இந்நிலையில் கோவை, துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் அமைந்து உள்ள ரயில்வே கிராசிங்கில் ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்ததால் அங்கு சென்று கொண்டு இருந்த வாகனங்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர். கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி நோக்கிச் செல்லும் மக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கிராசிங் - கை கடந்து கொண்டு இருந்த நேரத்தில், எச்சரிக்கை மணி ஒலிக்காமல், எந்த அறிகுறியும் இன்றி ரயில்வே கேட் திடீரென  கீழே விழுந்து உள்ளது. இதனால் கேட்டைத் தாண்ட முயன்ற வாகன ஓட்டிகள் தப்பி ஓடியதால் அங்கிருந்து வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.